முன்னாள் மத்திய தொலைத் தொடபுத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின், பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில், தயாநிதியின் முன்னாள் தனி செயலாளர் கௌதமன் சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கௌதமன், சன் டி.வி. முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி உள்ளிட்டோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நேற்று முந்தினம் விசாரணைக்கு வந்த, இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை அடுத்து, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள, மூவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி,
‘‘இவ்வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கிறது. பொதுமக்கள் நலனும் இவ்வழக்கில் அடங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர்கள் இன்னமும் சம்பந்தப்பட்ட நிறுவனத் திலேயே வேலை செய்வதால், குற்றம் சாட்டப்பட்ட வேறு சிலர் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத் தலாம்.
அதனால், இவர்கள் சாட்சி களைக் கலைக்கக்கூடும். எனவே, இவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தர விட்டார்.
No comments:
Post a Comment