Friday, 30 January 2015

சினிமாவில் இத்தனை வருஷமா விஜய் சம்பாதித்த சொத்து இதுதான்..?


விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. லைக்கா நிறுவன உரிமையாளர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான நண்பர் என்பதால் கத்தி படத்திற்கு பல பிரச்சினைகள் வந்தது.
பிறகு ஒரு வழியாக படம் ரிலீஸாகி 100 கோடி ரூபாய் வசூலையும் குவித்தது. இந்நிலையில் கத்தி படம் வெளியாகி நேற்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். டுவிட்டரிலும் இதை டிரெண்டாகக்கினர்.
இந்நிலையில் இது குறித்து விஜய் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, நீங்கள் என் மீது செலுத்திய அன்புக்கு நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை. இத்தனை ஆண்டுகளாக நான் சம்பாதித்த பெரிய சொத்தே நீங்கள் தான் என்று தெரிவித்துள்ளார். விஜய் சம்பாதித்த பெரிய சொத்தே அவரது ரசிகர்கள் தானாம். வாழ்த்துக்கள் விஜய் சார் மற்றும் விஜய் ரசிகர்கள்.

No comments:

Post a Comment