Friday, 30 January 2015

வாய்ப்பபை பயன் படுத்த பல வழிகள் உண்டு.. அதில் இதுவும் ஒன்று..!


பாலிவூட் நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர். ஆனால், நடிகை பிரியா பானர்ஜி பாலிவூட் திரையுலகிற்கு அறிமுகமாகுவதற்கான வாய்ப்பும் டுவிட்டர் மூலம் கிடைத்துள்ளதாம்.
2013 இல் வெளியான கிஸ் எனும் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பானர்ஜி. அதன்பின் மேலும் இரு தெலுங்குப் படங்களில் நடித்த அவர், தமிழில் உலா எனும் படத்திலும் நடித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் ஜாஸ்பா எனும் படத்தின் மூலம் பாலிவூட் திரையுலகிலும் பிரியா பானர்ஜிஅறிமுகமாகவுள்ளார். பல வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா பாலிவூட்டில் ரீ-என்ட்ரி படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு டுவிட்டர் மூலமே பிரியா பானர்ஜிக்கு கிடைத்தது என சஞ்சய் குப்தாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். பிரியா தோன்றும் வீடியோவொன்றை பார்த்த வேளையிலேயே அவர் குறித்து விசாரித்து தனது படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு சஞ்சய் குப்தா தீர்மானித்தார் என மேற்படி நபர் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் பிரியா பானர்ஜி வேறு இந்திப் படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என்பது சஞ்சய் குப்தாவுக்கு தெரியவந்ததாம். 24 வயதான பிரியா பானர்ஜி கனடாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாஸ்பா படத்தில் இர்பான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஷோபனா ஆஸ்மி, சித்தார்த் கபூர், அனுபம் கேர், அதுல் குர்கர்னி, ரோஞ் சானய்யால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
சமூக வலைத்தளம் மூலம் பாலிவூட் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புப் பெற்ற முதல் கலைஞர் பிரியா பானர்ஜி அல்லர். 2012 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் கபூர் தனது முதல் படமான இஷாக்ஷாட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பேஸ் புக் மூலம் பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment