கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம், விபத்தில் சிக்கி அழிந்துவிட்டதாக, மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த மலேசிய விமானம், MH370, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் நாள், சாடிலைட் தொடர்புகளில் இருந்து தொலைந்து போனது.
அன்றிலிருந்து இவ்விமானத்தை மிகத் தீவிரமாகத் தேடி வந்தனர். தேடுதல் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா என்று பன்னாட்டு மீட்புப் படைகளும் களமிறங்கின. ஆனால், இன்று வரை இவ்விமானம் விபத்துக்குள்ளானது குறித்த எந்த தடையங்களும் கிடைக்கவில்லை.
இவ்விமானம் விபத்தானதா அல்லது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் பயணித்த 227 பணியகள் மற்றும் 12 விமான ஊழியர்களின் நிலை என்பது இன்றும் தெரியவில்லை. உலக அளவில் இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மலேசிய அரசு, இவ்விமானம் விபத்துக்குள்ளானதாகவும், இவ்விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது. விமானப்பயணிகளின் உறவினர்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
இது குறித்து மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, இத்தனை நாட்கள் தேடியும் மலேசிய விமானம் MH370, குறித்த எந்த தகவல்களும் கிடைக்காத நிலையில், கணத்த இதயத்துடன், இவ்விமானம் விபத்துக்குள்ளானதாகவும், இதில் பயணித்த 239 பேரும் இறந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
இருந்தாலும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலைக் கேட்ட பயணிகளின் உறவினர்கள் பெரும் பதற்றத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த அறிவிப்பை பலர் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
No comments:
Post a Comment