அமெரிக்காவின் புகழ்பெற்ற இளம் பாடகியான டெய்லர் ஸ்விப்ட், நீச்சலுடை அணிந்த வாறு தனது தோழிகளுடன் கடற்கரையில் தான் பொழுது போக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பலரை வியப்படையச் செய்துள்ளார்.
அமெரிக்கப் பாடகியொருவர் நீச்சலுடையில் தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமான விசயமல்ல. பாடகி டெய்லர் ஸ்விப்ட் நீச்சலுடையுடன் கடற்கரையில் காணப்படும் புகைப்படங்கள் இதற்கு முன்னரும் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படங்களில் அவர் தொப்புள் தெரிய ஆடையணிந்திருப்பதுதான் ஆச்சரியத்துக்கு காரணம்.
செல்வந்த குடும்பமொன்றில் பிறந்தவர் டெய்லர் ஸ்விப்ட். அவரின் பாடல் ஆல்பங்களும் பல வருடங்களாக மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் 25 வயதிலேயே கோடிக்கணக்கான டாலர் சொத்துகளை சுயமாக அவர் சம்பாதித்துக்கொண்டுள்ளார்.
பெரும் புகழும் பணமும் கொண்ட அவர், மேற்குலகின் ஏனைய இசைத்துறை நட்சத்திரங்களிலிருந்து சற்று வித்தியாசப்பட்டவர். தொப்புள் தெரிய ஆடையணியாமல் இருப்பதில் கவனம் செலுத்துபவராக அறியப்பட்டவர் அவர். "என்னிடம் தொப்புள் இருக்கிறதா இல்லையா என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை" என முன்னர் ஒரு தடவை அவர் கூறியிருந்தார்.
கடற்கரைகளில் உல்லாசமாக நீச்சலடிக்கும் போது கூட அவர் தொப்புள் தெரிய பிகினி அணிவது அரிது. பெரும்பாலும் தொப்புளை மறைக்கும் விதமான 1950களின் பாணியிலான நீச்சலுடைகளையே அவர் அணிந்திருப்பது வழக்கம். இதனால் பாட்டியின் பாணியில் பிகினி அணிகிறார் எனவும் அவரை சிலர் விமர்சித்துள்ளனர்.
ஆனால், அண்மையில் அவர் ஹவாய் தீவின் கடற்கரைகளில் தனது தோழிகளுடன் காணப்பட்டபோது தொப்புள் தெரிய பிகினி அணிந்திருந்ததார். அப்போது பிடிக்கப்பட்ட படங்களை அவரே தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளமை அவரின் ரசிகர்ளுக்கு வியப்பேற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment