Friday, 30 January 2015

முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவை 200 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து…!


ஆஸியில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றது.
பெர்த் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட்டுடன் ஜெயிதால் இறுதிப்போடியில் விளையாடலாம். எனவே கடாயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய வீரர்களான ரஹானே மற்றும் தவான் இருவரும் நிதானமாக ஆடினர்.
அணியின் ஸ்கோர் 83-ஐ எட்டியபோது தவான் 38 ரன்கள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கோலி 8 ரன்களுடனும், ரெய்னா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து இறங்கிய வீரர்களும் சொதப்பலான ஆடத்தினையே வெளிப்பட்டுத்தினர். 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 73, தவான் 38 மற்றும் ஷமி 25 ரன்கள் எடுத்தனர். மேலும் கேப்டன் தோனி 17 மற்றும் ராயுடு 12 இவர்களையும் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே 2 இலக்க ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியில் ஃபின் 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ், பிராட் மற்றும் அலி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது இங்கிலாந்து.

No comments:

Post a Comment