நடிப்பு மூலம் திரையில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று திரைக்கு வந்து வேலைக்கு ஆகாமல் கவர்ச்சியில் இறங்கிய நடிகைகளில் சீக்கிரமாகவே சேர்ந்தவர் ஸ்ருதிஹாசன்.
ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்ற பெயருடன் சுற்றிய ஸ்ருதி, தற்போது வரிசையாக் ஹிட்தான். தெலுங்கில் கொடிகட்டி பறக்கின்றார் அம்மணி.
தனது 29வது பிறந்தநாளை இன்று தனது தந்தை கமலஹாசனுடன் கொண்டாடிய ஸ்ருதி, தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளார்.
அதாவது, தங்கள் வாழ்க்கையில் செய்த நல்ல விஷயம் என்ன என்பதை இவரது மெயிலுக்கோ அல்லது சமூக வலைதளங்களுக்கோ அனுப்புமாரும். அதில் சிறந்த ஐந்து பேருக்கு அவரது கையெழுத்துடன் கூடிய புகைப்படத்தை வழங்குவாராம். மேலும், ஸ்பெஷல் பரிசு ஒன்றும் இருக்கின்றதாம்.
No comments:
Post a Comment