Friday, 30 January 2015

அது போன மாசம்… இது இந்த மாசம்… அமெரிக்கா அடித்த பல்டி!!?


தீவிரவாத்தை வேரோடு அழிப்போம் என்று சில ஆண்டுகளாகவே அமெரிக்கா புஷ்டி முருக்கி கொண்டு சுற்றிவருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை அளிப்பதற்காக தன் நாட்டின் ராணுவத்தை அங்கு நிறுத்தியுள்ளது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.
இந்நிலையில் அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர். “தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை, அவர்கள் ஆயுதம் ஏந்திய போராளிகள். ஆனால் ஐ.எஸ் அமைப்பினர் போன்ற தீவிரவாதிகளை நாங்கள் விட மாட்டோம். அவர்களை அமெரிக்கா அழித்தே தீரும்” என்று கூறியுள்ளார்.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா உமரை பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அறிவித்திருந்தது இதே அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment