பல தொலைக்காட்சி தொடர்களிலும், ‘சோக்கு சுந்தரம்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பவர் லாவண்யா. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் இரண்டு பட்டமேற்படிப்பு படித்துள்ளேன். சோக்கு சுந்தரம் என்ற படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளேன். சன், ஜெயா, விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்துள்ளேன். மேடைப்பாடகியாகவும் தொழில் செய்கிறேன். கெளரவமாக வாழும் எனக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் எனது படத்தை ஆபாசமாக வெளியிட்டுவிட்டனர். நண்பர்கள் உதவியுடன் அந்த ஆபாசபடங்களை அழித்துவிட்டேன்.
தற்போது மீண்டும் என்னை பற்றி தவறான தகவல்களை தீபிகா, தீபிகா என்ற பெயருள்ள பேஸ்புக்கில் வெளியிட்டு, ஆபாச படத்தையும் வெளியிட்டுவிட்டனர். என்னை விபசார அழகியாக சித்தரித்துள்ளனர். நானே வாடிக்கையாளர்களை உல்லாசத்துக்கு அழைப்பதுபோல தகவல்களை பரப்பி உள்ளனர். இதை பேஸ்புக்கில் பார்த்துவிட்டு ஏராளமான பேர் செல்போனில் தொடர்புகொண்டு தவறான உறவுக்கு அழைக்கிறார்கள்.
இதற்கு பதில் சொல்லமுடியாமல் அவமானம் அடைந்து 2 முறை நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது கணவர்தான் என்னை காப்பாற்றினார். எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கணவர் நல்லவர் என்பதால், என்னை அவர் சந்தேகப்படவில்லை. என் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட பேஸ்புக் பக்கத்தை முடக்கவேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். இவ்வாறு லாவண்யா தெரிவித்தார்.
No comments:
Post a Comment