நாளை ஜன.,30, எதை விட்டாலும் இந்த வெள்ளிக்கிழமை செண்டிமெண்டை மட்டும் தமிழ் சினிமாவில் விடமாட்டார்கள். நாளை வெள்ளிக்கிழமை என்பதால் மொத்தம் 4 படங்கள் வெளியாக இருக்கின்றது.
நடிகர் பிரஷாந்த்துக்கு மட்டும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையோ என்னமோ.. இன்றே தனது புலன் விசாரணை 2 படத்தினை ரிலீஸ் செய்துவிட்டார். நாளை டூரிங் டாக்கீஸ், தரணி, இசை, கில்லாடி ஆகிய படங்கள் வெளியாகின்றது.அவற்றை பற்றி ஒரு சிறு பார்வை.
இசை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு SJ சூர்யா நடிக்கும் படம் ‘இசை’ ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடத்த பிறகு இதில் பிஸியாகி விட்டார் சூர்யா. இப்படத்தில் புதுமுக நாயகி சாவித்ரி நடிக்கிறார். மேலும், சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ் பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்ததும் SJ சூர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டூரிங் டாக்கீஸ்:
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இயக்கி இருக்கும் படம் ’டூரிங் டாக்கீஸ்’. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, ஏ.வெங்கடேஷ் மற்றும் அபி சரவணன் உள்ளிடோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
கில்லாடி:
பரத் நடிப்பில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் கில்லாடி. பரத் ஜோடியாக நிலா நடிக்க, விவேக், ரோஜா, இளவரசு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
தரணி:
நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு நடிகர் ஆரி நடிக்கும் படம் ‘தரணி’. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்களின் வாழ்க்கையை சுற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார், குகன் சம்பந்தம். ஆரியின் நண்பர்களாக குமாரவேல் மற்றும் அஜய் கிருஷ்ணா நடித்துள்ளனர். எமி சாண்ட்ரா என்ற அறிமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.
No comments:
Post a Comment