Friday, 30 January 2015

நடிகர் -நடிகைகள் கலாய்க்கும் கவுண்டமணி..!


பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் மூலம் அறிமுகமாகி காமெடியில் பட்டையை கிளப்பியவர் கவுண்டமணி. இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். நடிப்பு எனது வேலை. அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு நடிக்கிறேன் அவ்வளவுதான். இது என்ன பெரிய சாதனையா என்று யதார்த்தமாக பேசக்கூடியவர்.
எந்த விழாவிற்கு அழைத்தாலும் கலந்துக்கொள்ள மாட்டார். அப்படிப்பட்ட கவுண்டமணி, சில ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த அவர் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 49 ஓ படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.
வாய்மை படத்தில் ஒரு டாக்டர் கேரக்டர் என்றபோதும் அவருக்கு பாடல்கூட உள்ளதாம். இதையடுத்து, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் நடிக்க உள்ளார் கவுண்டமணி. இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான ஹீரோவாக நடிக்கிறார் என்பதை விசாரித்தபோது, கேரவன் உரிமையாளராக நடிப்பதாக தெரிய வந்தது.
அதாவது படப்பிடிப்பு தளங்களில் நடிகர் -நடிகைகள் ஓய்வெடுக்கும் கேரவனை வாடகைக்கு விடுபவராம். அதனால் சும்மாவே சினிமாக்காரர்களை கிண்டலடிககும் கவுணடமணி, இந்த படத்தில் கேரவன் லூட்டிகளையும தனது பாணியில் ஜாலியாக கலாய்ப்பார் என்று தெரிகிறது.. அதனால் இதுவரை கவுண்டமணி செய்த காமெடிகளில் இருநது இப்படத்தில் இன்னும் ஸ்பெசல் காமெடிகள் இடம்பெறும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment