இந்திய பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் 300 லட்சம் கோடிகளை தொட்டு புதிய சாதனை படைக்கும் என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறியுள்ளார்.
தனியார் மற்றும் துணிகர முதலீட்டு கூட்டமைப்புகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஜெயந்த் சின்கா கூறியதாவது,
‘இந்திய நிறுவனங்களில் பெருமளவு முதலீடு குவிந்து வருவதையடுத்து, ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது. அன்னிய முதலீட்டை அதிகளவில் கவர, அரசு பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அன்னிய முதலீட்டாளர்களின் வரி தொடர்பான பிரச்னைகளுக்கு, பட்ஜெட்டில் சரியான தீர்வு காணப்படும். மேலும், சிங்கப்பூர், லண்டனை போன்று, மும்பையை சர்வதேச நிதி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சொத்துகளை உருவாக்க விரும்புவோர், இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்.
இதையடுத்து, 120 லட்சம் கோடி ரூபாயாக (2 லட்சம் டாலர்) உள்ள, நம் இந்திய பொருளாதாரம், அடுத்த 10 - 12 ஆண்டுகளில், 240 - 300 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை படைக்கும்’ என்றார்.
No comments:
Post a Comment