Saturday, 31 January 2015

படப்பிடிப்பில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய கயல் ஆனந்தி..!


ரக்‌ஷிதா என்ற பெயரில் ஆந்திரா பக்கம் இருந்தவரை கயல் ஆனந்தி என்ற பெயரில் தமிழ்நாடு பக்கம் அழைந்து வந்தவர் பிரபு சாலமன். கயல் படம் தான் அவருக்கு முதல் படம் என்றாலும், கயலுக்கு பின்பு நடித்த பொறியாளன் படம் அவருக்கு முதல் படமாகிவிட்டது.
இந்த இரண்டு படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ஆனந்தியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு ஆனந்தியின் அசரடிக்கும் கண், அவருக்கு பட வாய்ப்புகளை தேடி வரச்செய்கிறது.
கயல் படம் வந்த பிறகு அவரை புக் பண்ணுவது பற்றி யோசிக்கலாம் என்று காத்திருந்த சில இயக்குநர்கள் தற்போது அவரிடம் கதை சொல்லி கமிட் பண்ணி வருகின்றனர். இதனால் தற்போது இரண்டு படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பென்சில்,டார்லிங், படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஆனந்திதான் நாயகி. இப்படம் தவிர, நய்யாண்டி சற்குணம் இய க்கும் சண்டி வீரன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார் ஆனந்தி. தஞ்சாவூர் அருகி லுள்ள வடுவூர் ஏரியில் சமீபத்தில் சண்டி வீரன் படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.
அப்போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதாம். முதலில் இதை கவனிக்காததால் தைரியமாக நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, தன் பக்கத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதை உ ணர்ந்ததும் அந்த இடத்தை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.
பின்னர், அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் இருப்பதெல்லாம் ரொம்பவும் சகஜம் என்றும், அதெல்லாம் விஷம் இல்லாத தண்ணீர் பாம்புகள் என்று சொன்னதை அடுத்து தைரியமாக நடித்து முடித்திருக்கிறார் ஆனந்தி.

No comments:

Post a Comment