தனக்கு மூன்று மார்பகங்கள் இருப்பதாக கூறிக்கொண்ட அமெரிக்க பெண் ஜெஸ்மின் ட்ரைடெவில், (jasmine tridevil) மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான இந்த பெண்ணின் உண்மையான பெயர் அலிசியா ஹெஸ்லர் ஆகும். பிளாஸ்திக் அறுவைச் சிகிச்சை மூலம் தான் மூன்றாவது மார்பகமொன்றை ஏற்படுத்திக்கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் நேற்றுமுன்தினம் புளோரிடா மாநிலத்தின் டெம்ப்பா நகரில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெஸ்மின் ட்ரைடெவிலின் மூன்றாவது மார்பகம் போலியானது என பலர் கருதுகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் விமானப் பயணமொன்றின்போது பயணப்பொதியில் வைத்திருந்த தனது போலி மார்பகமொன்று காணாமல் போனதாக அவர் புகார் செய்திருந்த தகவல் வெளியானமை மேற்படி கருத்தை வலுப்படுத்துவதாக இருந்தது.
ஆனால், தான் அறுவைச்சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பகத்தை உருவாக்கிக்கொண்டதாக ஜெஸ்மின் ட்ரைடெவில் தொடர்ந்து கூறி வருகிறார். "இது உண்மையான மார்பகம். மக்கள் நம்பாவிட்டால், நம்பாமல் போகட்டும்" என அவர் கூறுகிறார்.
ஜெஸ்மின் ட்ரைடெவில் போலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை இது முதல் தடவையல்ல. 2013 ஆம் ஆண்டு மோசடி குற்றச்சாட்டொன்றின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தன்னை வீட்டில் கூண்டொன்றில் அடைத்து வைத்து பாலியல் அடிமையாக நடத்தியதாக 18 வயதான இளைஞர் ஒருவர் இவர் மீது புகார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment