தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் இயக்குநர் அட்லீ. இவர் இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் என்பது நமக்கு தெரியும். இவர் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இது விஜய்யின் 59-வது படமாகும். தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படம் விஜய் கேரியரில் இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக உருவாகி வருகிறதாம்.
இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்பு அவர் நடிக்கவில்லை ஒரு பாலிவுட் ஹீரோயின் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி அவர் நடித்தால் நயன்தாராவின் இடம் பறிப்போகும் நிலை ஏற்படலாம். ஐ படத்திலேயே பாதி ரசிகர்கள் எமி பக்கம் சாய்ந்து விட்டார்கள். விஜய்யுடன் நடித்துவிட்டால்.. சொல்லவா வேண்டும்...
No comments:
Post a Comment