பல்கலைக்கழகமொன்றில் திருட முயற்சித்த திருடன் ஒருவன், உறைய வைக்கும் குளிரில் ஜன்னலொன்றிலிருந்து தலைகீழாக 5 மணி நேரம் தொங்கிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
நொட்டிங் ஹாம் திரென்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இட ம் பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
(வீடியோ கீழே)
30 அங்குல அகலமான ஜன்னல் வழியாக வெளியேற முயற்சித்த போது திருடன் அதில் சிக்கிக்கொண்டு தலைகீழாக தொங்கியுள்ளான். இதனையடுத்து அந்த திருடன் உதவி கோரி கூச்சலிடவும் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு கூடியுள்ளனர்.
தொடர்ந்து அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து பெரும் போராட்டத்தின் மத்தியில் திருடன் விடுவிக்கப்பட்டுள்ளான். திருடனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
(வீடியோ கீழே)
No comments:
Post a Comment