கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து ஹீரோக்களும் தங்களுக்கு வயதானாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் டை அடித்து கருப்பு முடியுடன் நடிக்கவே ஆசைப்படுவார்கள்.
ஆனால் முதல் முறையாக ஒரு முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நரை முடியுடன் நடிக்கத் துவங்கினார். அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக் அதாவது நரைமுடி கெட்டப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பல ரசிகர்கள் அவரை போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வலம்வர ஆரம்பித்தினர். ஒரு சில நடிகர்களும்அஜித்தை பார்த்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகின்றனர். அதில் புதிதாக இணைத்திருப்பவர் பாலிவுட்டின் வசூல் மன்னன் அமீர்கான்.
பிகே படத்திற்கு பிறகு அமீர் கான் நடிக்கும் புதிய படத்தில் ‘தல’ அஜித் போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் அமீர்கான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாம். அதனால் தான் இந்த லுக்காம்...
கலக்குங்க அமீர்கான்...
No comments:
Post a Comment