Saturday, 31 January 2015

இலக்கணம் இல்லா காதல்..!


கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் - திவ்யாவின் காதல் கதை. வேற்றுச்சாதியை சேர்த்த இவர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்துக்கொண்டு கடைசியில் வாழ முடியாமல் போனது.
திருமணத்திற்கு பிறகு திவ்யா தன்னுடைய பெற்றோர் தான் முக்கியம் என்று சென்றுவிட்டதால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் இளவரசன். இதனால் சாதி கலவரம் உண்டாகிவிடுமோ என்று அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தன் உயிரை விடுவதற்கு முன் இளவரசன் கடைசியாக எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று படித்தவர்கள் எல்லோரையும் உருக வைத்தது.
இந்நிலையில் தற்போது இந்த காதல் கதையை படமாக்க இருக்கிறார்கள். வாச்சாத்தி என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை, வாச்சாத்தி என்ற பெயரிலேயே படமாக்கியவர் ஆர் ரமேஷ். இவர் அடுத்து இளவரசன் - திவ்யாவின் காதல் கதையை படமாக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘இலக்கணம் இல்லா காதல்' என்று தலைப்பிட்டுள்ளார்.
இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா. இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின, ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை வி.சி.ஜெயமணி இயக்குகிறார்.
‘வாச்சாத்தி' படம் போலவே இப்படமும் விமர்சகர்க்ளிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில்தான் படமாக்குகிறார்கள்.

No comments:

Post a Comment