Friday, 30 January 2015

செலீனா கோமஸின் புதிய காதல்…!


அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான செலீனா கோமஸ், ஸெட்லெனா எனும் இளைஞரை காதலிக்க ஆரம்பித்துள்ளாரென கூறப்படுகிறது. 22 வயதான செலீனா கோமஸ் கனடாவைச் சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பைபரை காதலித்து வந்தார்.
இவர்கள் அடிக்கடி பிரிவதும் மீண்டும் இணைவதுமாக இருந்தனர். இந்நிலையில் தற்போது செலீனாவும் ஜஸ்டின் பைபரும் பிரிந்துவிட்டனர் எனவும் செல்டனாவும் செலீனாவும் காதலிக்கின்றனர் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 25 வயதான செல்டனா டி.ஜே. கலைஞரும் பாடல் பதிவாளரும் ஆவார்.
இவர் சுருக்கமாக "செட்" என அழைக்கப்படுகிறார். அண்மையில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கல் விழாவின் பின்னரான விருந்து நிகழ்வின்போது செலீனாவும் செல்டனாவும் கரம் கோர்த்தவாறு அந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் நெருக்கமான நின்று போஸ் கொடுத்தனர். ஹாலிவூட்டில் இது ஆச்சரியமானதல்ல.
ஆனால், கடந்த திங்களன்று பிரத்தியேகமாக தான் பிடித்துக்கொண்ட செல்பீ புகைப்படமொன்றை செலீனா கோமஸ் வெளியிட்ட விதம் இவர்களின் காதலை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. அப்படத்தில் செலீனாவுக்குப் பின்னால் செட்லெனா காணப்பட்டார். தான் அவரை மிஸ் பண்ணுவதாக செலீனா குறிப்பிட்டிருந்தார்.
ஜஸ்டின் பைபரின் செயற்பாடுகளால் செலீனா விரக்தியுற்றிருந்தமை செலீனாவின் ரசிகர்களையும் கவலையடையச் செய்திருந்தது. தற்போது செட்லனாவுடன் நெருக்கமானபின் செலீனா புன்னகையுடன் காணப்படுவது குறித்து ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment