ஜனவரி 29
1595
ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் முதன் முறையாக அரங்கேறிய தினம்
உலகின் தலைசிறந்த காதல் காவியங்களுள் ஒன்ற் ரோமியோ ஜூலியட். இத்தாலிய பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாடகத்தை வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதினார்.
ஷேக்ஸ்பியரின் அதிகம் பார்க்கப்பட்ட நாடகங்களில் இதுவும் ஒன்று. சோகமான முடிவைக் கொண்டுள்ள இந்த காதல் கதை வெவ்வேறு மொழியில், கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு திரைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் வெளிவந்துள்ளன.
காதலுக்கு பெயர் போன இந்த நாடகத்தால், ஆங்கிலத்தில் ரோமியோ என்ற சொல், காதல் வயப்பட்ட ஆண்களைக் குறிப்பதற்காகவே பயன்பட்டு வரிகிறது.
இத்தகைய பெருமைகள் கொண்ட இந்த நாடகத்தை எழுதி முடிக்க ஷேக்ஸ்பியருக்கு 5 ஆண்டுகள் பிடித்துள்ளதாக கருதப்படுகிறது. கி.பி. 1595ம் ஆண்டு ஷேக்ஸ்பியர் இக்காவியத்தை எழுத ஆரம்பித்து 1595ல் இதே நாளன்று முடித்ததாகக் கூறப்படுகிறது. முடித்த நாளன்றே இந்நாடகம் அரங்கேறியதாகக் கருதப்படுகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள் 1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது. 1814 - நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது. 1861 - கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது. 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார். 1916 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. 1946 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது. இன்றைய சிறப்பு தினம் அரசியலமைப்பு நாள்(கிப்ரல்டார்)
No comments:
Post a Comment