முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரியின் பிறந்தநாள் இன்று.
இந்நாளை, மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட அழக்ரியின் தொண்டர்கள் முடிவு செய்து, அரங்கேற்றியும் விட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, இரண்டு நாட்களுக்கு முன்பே போலீஸ் அனுமதி பெற்று, பர்த்து டே பாய் அழகரியின் வீட்டிலிருந்து ராஜா முத்தையா மண்டபம் வரை கொடி, தோரணங்கள், கட்-அவுட்டுகள், பேனர்கள் என வைத்து அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.
இந்நிலையில், இத்தனை நாள் அனுமதி கொடுத்துவிட்டு சும்மா இருந்த காவல்துறை, அழகிரியின் பிறந்தநாளான இன்று இந்த பேனர்களை எல்லாம் அகற்றியாக வேண்டும் என்று கெடுபிடி கொடுத்துள்ளதாம்.
இதனால், அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் செம கடுப்பாகி விட்டார்களாம். ”ஏன் இப்படி பன்றாங்க... பிறந்த நாளும் அதுவுமா...?? நேற்று வரை அனுதி கொடுத்த நீங்கள் ஏன் இன்று கெடுபிடி கொடுக்குறாங்க. எவ்வளவு செலவு பன்னி இதல்லாம் வச்சு இருக்கீங்க…
அதனால், இந்த உத்தரவை யாரும் கண்டு கொள்ள வேண்டாம். போலீஸார் வழக்கு ஏதாவது போட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பர்த்து டே பாய் அழகிரி தன் ஆதரவாளர்களுக்குச் சொல்லி விட்டாராம்.
இருந்தாலும், போலீஸ் கெடுபிடிக்கு பயந்து சில இடங்களில் பேனர்கள் நீக்கப்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment