Wednesday, 28 January 2015

ஒபாமா தலையை துண்டிக்கப் போகிறோம்.. ஐ.எஸ். தீவிரவாதிகள் சவால்..!


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தலையை துண்டித்து அவரை படுகொலை செய்யப் போவதாகவும் அமெரிக்காவை முஸ்லிம் மாகாணமொன்றாக மாற்றப் போவதாகவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிய வீடியோ காட்சியொன்றில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
பராக் ஒபாமா நாம் அமெரிக்காவை நெருங்குவோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என தெரிவித்த ஐ.எஸ். தீவிரவாதி நாங்கள் உங்கள் தலையை வெள்ளை மாளிகையில் வைத்து துண்டிக்கப் போகிறோம் என்பதையும் அமெரிக்காவை முஸ்லிம் மாகாணமொன்றாக மாற்றப் போகிறோம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் என அச்சுறுத்தல் விடுத்தார்.
மேற்படி வீடியோ காட்சியில் மண்டியிட்ட நிலையில் காணப்பட்ட குர்திஷ் படை வீரர் ஒருவர் அந்த வீடியோ காட்சியின் உச்சக்கட்டத்தில் தீவிரவாதிகளால் தலையை துண்டித்து படுகொலை செய்யப்படுகிறார்.
அரேபிய மொழியிலான இந்த பிந்திய வீடியோ காட்சி மெம்ரி தொலைக்காட்சி சேவையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோ காட்சியில் பிரான்ஸூக்கும் பெல்ஜியத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் செய்திகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
சிறையிலடைக்கப்பட்டுள்ள பெண் தீவிரவாதியொருவர் விடுதலை செய்யப்படா விட்டால் தம்மால் பிடித்து வைக்கப்பட்டுள்ள ஐப்பானிய ஊடகவியலாளரையும் ஜோர் தானிய விமானியையும் 24 மணி நேரத்தில் கொல்லப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்த தினத்திலேயே இந்த பிந்திய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
தாம் அமெரிக்காவை ஆக்கிரமிப்பதோடு நின்று விடப் போவதில்லை எனவும் பிரான்ஸ் மற்றும் அதன் சகோதர நாடான பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் தாக்குதல்களை நடத்தப் போவதாக அந்தப் தீவிரவாதி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
நாம் கார்க்குண்டுகளுடனும் வெடி பொருட்களுடனும் வந்து உங்கள் தலையை துண்டிப்போம் என அவர் எச்சரிக்கை செய்தார். மேலும் ஈராக்கிய குர்திஷ் தலைவர் மசூத் பரஸனியை மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்த அந்தப் தீவிரவாதி நாங்கள் உனது தலையை வெட்டி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் உன்னை வீசப் போகிறோம் என சூளுரைத்துள்ளனர்.
ஜப்பானிய பணயக் கைதி கௌஜி கொடோ ஜோர்தானிய விமானி அல் கஸிஸ்பெஹ் ஹின் புகைப்படத்துடன் காணப்படும் மற்றொரு வீடியோ காட்சி வெளியாகி சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment