இதைப் படிச்சதும் பயந்துவிடாதீங்க, சத்தம் போட்டு, ஊரைக் கூட்டாதீங்க, இவ்வாறு, நெதர்லாந்தில் தீவிரவாதி என்ற பெயரில் போலி துப்பாக்கியுடன் காமெடியாக டி வி நிறுவனத்துள் நுழைந்த ஒரு நபர், லெட்டர் எழுதிக் கொடுத்து நாட்டையே பீதியில் ஆழ்த்தியுள்ளார்.
நெதர்லாந்தின் ஹில்வெர்சம் என்ற நகரில் அரசு தொலைகாட்சி சேனல் அலுவலகம் இயங்கி வருகிறது. இதனுள் நுழைந்த கோட்சூட் அணிந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அதோடு தன் கையில் ஒரு துப்பாக்கியையும் வைத்திருந் துள்ளார்.
இந்த கடிதத்தில்,
“இதைப் படிச்சதும் பயந்துவிடாதீங்க. சத்தம் போட்டு, ஊரைக் கூட்டாதீங்க. நான் ஒரு பயங்கரமான தீவிரவாதி. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தா, உங்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படாது. நான் ஒரு ஹேக்கிங் குழுவைச் சேர்ந்தவன். எங்க டீம்ல மொத்தம் 98 பேர் இருக்கோம்.
உங்க நாட்டுல மொத்தம் எட்டு இடத்தில் பயங்கரமான பாம் வச்சு இருக்கோம். என்னை உங்க ஸ்டூடியோக்கு உள்ள கொண்டு போய் நான் சொல்லும் படி ஷூட் பன்னலைன்னா, பாம் வெடிக்கும், அதோட நானும் உங்களை ஷூட் பன்ன வேண்டி இருக்கும்.” என்று எழுதி இருந்தது.
உடனே டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அதோடு காவல்துறைக்கும் இந்த செய்தி அனுப்பப்பட்டது. விரைந்து வந்த போலீஸ் அவரிடம் பேச்சு கொடுத்தது.
இறுதியாக போலீசின் மிரட்டலைக் கண்டு அந்நபர் கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, சரண்டர் ஆகியுள்ளார். அந்தத் துப்பாக்கியை சோதனையிட்ட போது அது பிளாஸ்டிக் துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. கடுப்பான அந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜனவரி 7ம் தேதி பாரிஸில், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை நிறுவனம் தாக்கப்பட்டதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் செம அலர்டாக உள்ளன. எந்த நாட்டிலும், எப்போது வேண்டுமானாலும் எந்த பிரச்சனையும் வரக்கூடும் என்பதால், அந்தந்த நாடுகளின் படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளன.
இந்நிலையில், இந்த போலி தீவிரவாதியின் காமடி தாக்குதல் ஐரோப்பிய நாடுகளை ஒரு நொடி கதி கலங்க வைத்துள்ளது.
No comments:
Post a Comment