முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முதலிடம் பிடித்த ’கத்தி’ திரைப்படம் இன்றுடன் 100 நாட்களை தொடுகிறது.
நடிகர் விஜய்யின் திரை வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல் எனுமளவிற்கு இப்படம் அமைந்தது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்படம் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதைக்கு பிரச்சனை, படத்தயாரிப்பாளருக்கு எதிராக ஒரு பிரச்சனை, தியேடர் கண்ணாடி உடைப்பு என பல பிரச்சனைகளால், படத்தின் ரிசர்வேஷனே ரிலீஸுக்கு முதல் நாள்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஒருவழியாக படம் வெற்றிப்படமாக அமைந்தது.
படத்தின் வெற்றி குறித்து விஜய்யை கேட்டால் எல்லாமே என் ரசிகர்கள்தான் காரணம் என்பார். அதனால் அதன் 100வது நாளான இன்று, இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் பின்னணி இசையை வெளியிட முடிவு செய்துள்ளார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார். இதையே பெரிய அளவிற்கு கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.
No comments:
Post a Comment