தனது மகளின் முன்னாள் காதலனான 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான பெரெஷ்டா ஏஞ்சல் வில்லியம்ஸ் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பெண் சுமார் 3 மாத காலமாக தனது மகளின் முன்னாள் காதலனான சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து இப்பெண்ணை பல வாரங்கள் கண்காணித்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விருவருக்கும் இடையில் எவ்வாறு உறவு ஆரம்பித்தது என்ற விபரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பாக இப்பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment