யோஷிதா ராஜபக் ஷே வின் CSN ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு 100 கோடி வரி விதிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அதிபராக பதவி ஏற்ற பின்பு இலங்கையின் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது நிதியமைச்சர் ரவி கருணா,
‘நாட்டில் உள்ள விளையாட்டு சேனல்களுக்கு, ஒருமுறை வரியாக, 100 கோடி ரூபாய் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இலங்கையில், விளையாட்டுக்கென, CSN சேனல் மட்டுமே உள்ளது என்பதால், அந்நிறுவனம் இந்த வரியை செலுத்தினால் தான் ஒளிபரப்பை தொடர முடியும். ஆனால், இந்நிறுவனம், துவங்கியது முதல், அரசுக்கு, 1 ரூபாய் கூட வரி செலுத்தவில்லை’ என நிதியமைச்சர் தெரிவித்தார்.
அரசு சேனலான ரூபவாஹினி தான் முன்பு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. ஆனால், ராஜபக் ஷே பதவி ஏற்ற பின், எந்தவித அறிவிப்பும் இன்றி தனது மகனின் CSN நிறுவனத்திற்கு அந்த உரிமையை வழங்கினார். அது முதல், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமங்களையும், CSN பெற்று வந்தது.
தற்போது, ரூபவாஹினியிடம் இருந்து விளையாட்டு ஒளிபரப்பு உரிமம் பறிக்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க, இலங்கை அரசு உத்தரவிட்டுஉள்ளது.
No comments:
Post a Comment