பங்களாதேஷிலிருந்து மலேசியாவுக்கு அளவுக்கதிகமான குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற மீன்பிடிப் படகு ஒன்று பங்களாதேஷ் கடற்கரைக்கு அப்பால் வியாழக்கிழமை மூழ்கியதில் பலர் காணாமல் போயுள்ளனர்.
படகில் பயணித்த 70க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளில் 32 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீந்திக் கடற்கரையை வந்தடைந்துள்ளனர்.
மேற்படி படகு சித்தாகோங் துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள கடற்கரையிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் கடல் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. மேற்படி படகு குதுப்பியா தீவுக்கு அருகில் மூழ்கியுள்ளது.
அந்தப் படகில் பயணித்த அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் எனவும் அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவை நோக்கி புறப்பட்டிருந்ததாகவும் உள்ளூர் போலிஸ் தலைவர் மசூத் அலாம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment