ஆஸ்திரேலிய சிட்னி உணவகமொன்றின் மீது கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பணயக்கைதியான கத்ரினா டவ்ஸன் போலிஸ் துப்பாக்கி குண்டு அல்லது குண்டுகளால் தாக்குண்டே உயிரிழந்துள்ளதாக மேற்படி தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆரம்பமானபோது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பணயக்கைதியான மேற்படி உணவகத்தின் முகாமையாளர் டோரி ஜோன்ஸன் துப்பாக்கிதாரியான ஹரொன் மொனிஸ் நடத்திய சூட்டால் உயிரிழந்துள்ளார். மேற்படி லன்ட் சாக்கலட் உணவகத்துக்குள் போலிஸார் ஊடுருவிய போதே மொனிஸ் ஜோன்ஸனை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த உணவகத்தில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 18 பேரில் ஒருவரான கத்ரினாவின் உடலில் போலிஸாரின் துப்பாக்கி குண்டு அல்லது குண்டுகளின் 6 துண்டுகள் காணப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரேத பரிசோதனை அதிகாரிக்கு உதவி கரமாக செயற்படும் சட்டத்தரணி ஜெரெமி கொர்மலி தெரிவித்தார்.
துப்பாக்கிதாரியான மொனிஸ் குறிப்பிட்ட உணவகத்துக்குள் நுழைந்து அந்த உணவகத்தின் முகாமையாளரான ஜோன்ஸனை அச்சுறுத்தி உணவகத்தை தாளிட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை மற்றொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment