எவ்வளோ நாள் தான் நாங்களும் கிரிக்கெட்டை இங்லீஷ், ஹிந்திலயே கேக்றது அப்படினு கவலை பட்டிருக்கீங்களா?? கவலைய விடுங்க..!
உங்களுக்காகவே விஜய் டிவி களத்தில் இறங்கியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை லைவ்வாக அதுவும் தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்ப உள்ளது.
வரும் பிப்ரவரி 14-ல் ஆரம்பித்து மார்ச் மாதம் வரை ஆஸி மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிகளை விஜய் டிவி தமிழில் லைவ்வாக ஒளிபரப்பப் போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து வரும் காலங்களிலும் இது தொடரும் என தெரிகிறது.
No comments:
Post a Comment