இத்தாலியை சேர்ந்த நகர மேயர் ஒருவர் சட்ட விரோத விபசாரத்தை கண்டுபிடித்து முறியடிக்க விநோத வழிமுறையைக் கையாண்டுள்ளார்.
காஸ்டெல் வொல்துர்னோ நகர மேயரான திமித்ரி ருஸோ பெண் நகர சபை உறுப்பினர்களான அனஸ்டாஸியா பெட்ரால்லா மற்றும் ஸ்டெபனியா சன்கர்மனோ ஆகியோரை விலை மாதர்கள் போன்று குட்டை பாவாடையுடன் வீதியில் நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அந்த போலி விலைமாதர்களை அணுகிய ஆண்களை இரகசியமாக புகைப்படமெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி பெண் நகர சபை உறுப்பினர்களை விலை மாதர்கள் என கருதி அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் அணுகிய போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றின் பின்பகுதியில் புகைப்படக் கலைஞருடன் மறைந்திருந்த நகர மேயர் அவர்களை எதிர்கொண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
கையுங்களவுமாக பிடிக்கப்பட்ட அந்த ஓட்டுநர்கள் தமது செயலுக்காக தண்டப்பணம் செலுத்த நேர்ந்தது. இத்தாலியில் பணத்தை செலுத்தியும், பெற்றும் பாலியலில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும்.
No comments:
Post a Comment