Friday, 30 January 2015

காக்க வேண்டிய போலீஸே இப்படியா...?? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….?!!


கோவையில் மக்களைக் காக்க வேண்டிய போலீஸே, வேகமாகக் காரோட்டிச் சென்று வங்கி ஊழியர் ஒருவரைக் கொன்ற சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்துள்ள குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ரகேனா பேகம்.
கோவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்துவரும் இவர், நேற்று வழக்கம் போல் பணிக்குத் தன் ஸ்கூட்டியில் சென்றுள்ளார். காலை 9:15க்கு, ஸ்கூட்டியில் சுங்கம் கல்லறைத் தோட்டம் அருகே ரெகனாபேகம் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு போட்டியாக கார் ஒன்று வந்தது.
வேகமாக வந்த அந்தக் கார் பேகமை முந்திச்செல்ல முயற்சித்துள்ளது. ஆனால், ஒரு சில நொடிகளுக்குள் பேகம் அந்தக் காரால் அடித்து தூக்கி வீசப்பட்டார். அவரது ஸ்கூட்டியும் அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில், அடிபட்டு ரத்தப் போக்கு அதிகமாக வெளியேறிய நிலையில், ரகெனா பேகம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காட்டுத் தீயாய் இந்தத் தகவல் பரவ, கோவை போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்தும், அந்த டிரைவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அந்தக் கார் கோவை மாநகர போலீஸ் துனைக் கமிஷ்னர் ரம்யா பாரதியினுடையது என்றும், காரை ஓட்டி வந்தது அசோக் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. இதில், அசோக் குமாரும் போலீஸ்காரர் என்பது தான் சோதனை.
கோவை துனைக் கமிஷ்னருக்காக, அப்பகுதி போலீஸ் பயிற்ச்சி பள்ளியில் குடியிருப்பு ஒன்று கட்டப்படுகிறது. இந்த குடியிருப்பை பார்ப்பதற்கு துனைக் கமிஷ்னரின் பெற்றோர் துனைக் கமிஷ்னரின் காரில் வந்துள்ளனர். இதன் போது தான் இந்த விபத்து ஏற்படுள்ளது.
இந்த விஷயம் தெரிந்ததும் கோவை போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாத் விபத்துக் காரணமான, போலீஸ் அசோக் குமாரை சஸ்பெண்ட் செய்துவிட்டார். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment