அரசுப் பொதுத் தேர்வுகளில் ’பிட்’ அடிக்கு மாணவர்களுக்கு, மறு தேர்வு எழுத இரண்டு ஆண்டுகள் தடையும், அறை கண்காணிப்பாளர்கள் அல்லது பறக்கும் படை அதிகாரிகளை முறைப்பது போன்று தவறாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஆயுள் முழுக்க மறு தேர்வுக்கு தடை விதிப்பது குறித்தும், அரசுத் தேர்வுத் துறை யோசித்து வருகிறதாம்.
இந்த ஆண்டு மார்ச் முதல் வாரம் முதல், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள்தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.
அரசுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தவிற்க ஒவ்வொரு ஆண்டும், அரசுத் தேர்வுத் துறை தீவிர முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறையும், முறைகேடுகளை தவிற்பது குறித்த பல திட்டங்களை அரசுக் கல்வித்துறை அதிகாரிகள் தீட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்வுக்கு, துண்டுச் சீட்டு‘பிட்’ அடித்தல், புத்தகம் கொண்டு வந்து காப்பி அடித்தல், போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்துள்ளது.
அதோடு, தேர்வறைக்குள், கண்கானிப்பாளருக்குத் தெரியாமல், புத்தகம், துண்டுச் சீட்டு கொண்டுவரும் மாணவர்களுக்கு ஓராண்டு தடையும் விதித்துள்ளது தேர்வாணையம்.
இது தவிற, தேர்வுக் கண்காணிப்பாளர் அல்லது பறக்கும் படை அதிகாரிகளிடம், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களும், சக மாணவர்களின் விடைத்தாள்களை எடுத்து காப்பி அடிக்கும் மாணவர்களுக்கும் ஆயுள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கவும், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாம்.
அதேசமயம், இந்த புதிய முடிவு குறித்த அதிகாரப்பூர்வ சுற்றரிக்கை இன்னமும் வரவில்லை என்றும் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இது குறித்து உறுதி செய்யப்படும் என்றும், அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தேவராசன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு செயல்களின் அடிப்படையில் இரண்டாண்டு தடையும், ஓராண்டு தடையும் அமல் படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment