கடந்த வருடம் ஹெட் நடிகருடன் வீரமான படத்தில் ஜோடி சேர்ந்து ஹிட்டடித்தார், வெள்ளை நடிகை. தற்போது அதே ஹெட் நடிகரால் மனம் குமுறி வருகிறாராம் இவர்.
புத்த இயக்குனரின் படத்தை முடித்து விட்ட ஹெட் நடிகர், மீண்டும் வீரமான படத்தின் இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். போன படத்தில் ஹிட் அடித்ததால் இதிலும் தன்னை அழைப்பார்கள் என்று எண்ணிய வெள்ளை நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொறுத்தது போதும் என்று இயக்குனரிடம் நேரடியாக சென்று கேட்டே விட்டாராம்.
ஆனால் இயக்குனரோ அவரால் இதில் முடிவெடுக்க முடியாது என்றும், ஹெட் நடிகர் இதுவரை ஜோடி சேராத ஹீரோயின் தான் வேண்டும் என்று கூறிவிட்டார் எனக் கூறியுள்ளார். இதனால், மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என கனவுக் கோட்டை கட்டிய வெள்ளை நடிகை உடைந்தே போய்விட்டாராம்.
அதே நேரம் ஹெட் நடிகர், உலக ஹீரோ வாரிசிடம் கேட்க சொன்னாராம். ஆனால், வாரிசு நடிகையோ தெலுங்கு படம், நைஃப் நடிகரின் அடுத்த படம் என பிஸியாக இருப்பதால் யோசிக்கின்றாராம்.
No comments:
Post a Comment