Friday, 30 January 2015

வெளிநாட்டவர்களை விட அகதிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: சுவிஸ் அரசு முடிவு


சுவிட்சர்லாந்தில் வேலை தேடி வரும் வெளிநாட்டவர்களை விட, புகலிடம் தேடி வரும் அகதிகளுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பொதுமக்கள் பலர் அகதிகளுக்கு சாதகமாக வாக்களித்தனர். இதன் படி இந்த ஆண்டில் சுமார் 2000 அகதிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு இதன் ஒரு பகுதியாக, EU Pilot Project மூலம் அகதிகளாக சுவிஸ் வந்துள்ளவர்களில் 500 பேருக்கு சுவிஸ் செஞ்சிலுவைச்சங்கம், மருத்துப் பயிற்ச்சி கொடுக்க உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் உள்ள அகதிகளில் 20 சதவீதத்தினர் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment