விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கிவரும் புலி படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது.
இப்படத்திற்காக விஜய் பயங்கரமான ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளாராம். இதை ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் நாங்(Nang)கூறியுள்ளார். இதேபோன்று புலி படத்தை பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு.
இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை தெரிவிக்கிறோம். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் வெளியாகுமாம். துப்பாக்கி, ஜில்லா, கத்தி படத்தை தொடர்ந்து புலி படத்தில்விஜய் எப்படி இருப்பார் என்பதை பார்க்க பிப்ரவரி மாதம் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்..
No comments:
Post a Comment