Thursday, 29 January 2015

திருப்பதியில் அஜித்…! வீரம் செண்டிமெண்ட்??


நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் திருப்பதி மலையில் பெருமாள் தரிசனம் செய்துள்ளாராம். வழக்கம் போல வேஷ்டி சட்டையுடன் கோவிலுக்கு வந்த அவரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்று, பெருமாள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
பின்னர், அங்கு தனது ரசிகர்களை சந்தித்த அஜித்அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரசிகர்கள் சிலர் திருப்பதி ஏழுமலையான் புகைப்படத்தை பரிசாக அளித்தனர்.
ஏன் இந்த திடீர் விசிட்?? ’அட சாமி கும்புடுறதுக்கெல்லாமா ரீஸன் தேடுவீங்க அப்படி நெனச்சா… ’ அட இல்லப்பா வீரம் படம் முடிஞ்சதும் அஜித்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதி சென்று மொட்டை அடித்தார்கள், படமும் வெற்றி அடைந்தது… அதே செண்டிமெண்ட் ஃபாலோயிங் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

No comments:

Post a Comment