கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இசை படம் மூலம் மீண்டும் களத்தில் குதிருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. இதுவரை இயக்குநர், நடிகராக வளம்வந்த எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக இசையமைப்பாளராக அவதாராம் எடுத்திருக்கிறார்.
இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்ரி என்று புதுமுக நடிகை நடிக்க, ஆறடி நாயகன் சத்யராஜ் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
சரி எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’க்கு வரவேற்பு எப்படி?
இசை எங்கிருந்து வருகிறது? என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், கண்டிப்பாக இசைக்கு ஈகோ இருக்கிறது. தன் கண்முன்னே தன் சிஷ்யன் வளர்வதை தான், எல்லா குருக்களும் விரும்புவார்கள். அப்படியிருக்க திடிரென்று அவர்களையே தாண்டி ஒரு இடத்திற்கு சிஷ்யன் செல்லும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது. அப்படி ஒரு பிரச்சனையான கதைக்களத்தை கையில் எடுத்து, அதை தனக்கே உரிய சூப்பர் ஸ்பெஷல் திரைக்கதையில் கலக்கியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவின் ஈகோ க்ளாஷ் (Ego Clash) விஷயத்தை மிகவும் அருமையாக கையாண்டது, கஞ்சா கருப்பின் காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்க வைக்கிறது. படத்தின் வசனம் ஒவ்வொன்றும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான ஸ்டைலில் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
படத்தில் பல இடங்களில் ரசிகர்களின் க்ளாப்ஸ் சத்தம் கேட்கிறது. சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவின் ஈகோ க்ளாஷ் (Ego Clash) விஷயத்தை மிகவும் அருமையாக கையாண்டு இருக்கிறார்கள், கஞ்சா கருப்பின் காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்க வைக்கிறது. படத்தின் வசனம் ஒவ்வொன்றும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான ஸ்டைலில் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
இருந்தாலும் படத்தின் முதல்பாதி மெதுவாகவும், போரடிக்கும் வகையிலும் நகருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல் படத்தில் ஒரு சில காட்சிகள் கிளாமர் தூக்கலாக இருக்கிறதாம்... மொத்தத்தில் இசையை ரசித்து பார்க்கலாம்..
No comments:
Post a Comment