உணவே மருந்து என்ற பாலிசியில் வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால், நாமோ, இன்று இதை எல்லாம் எபவோ மறந்துட்டு, பீட்ஸா, பர்கர், என வாய்க்கு ருசி கொடுத்து, வயிற்றை வளத்துக் கிட்டு வரோம்.
இந்த வயிற்றை குறைப்பதற்கு, அப்பப்போ எக்ஸர்சைஸ், சப்பாட்டை குறைச்சுகிட்டு டயட் அப்படின்னு ரொம்ப கஷ்டப் பட்டுகிட்டு இருக்கோம். இந்த வகையில், நாம் சாப்பிடும் போது எப்படியெல்லாம் சாப்பிட கூடாதுனும், டயட் இருக்கும் போது, எப்படி என்னல்லாம் கடைபிடிக்கனும் அப்படிங்கிறத பத்தி பாக்கலாம் வாங்க.
1. டயட்டை பிளான் பன்னாம சாப்பிடுவது
நீங்க டயட் இருக்கனும் அப்படின்னு முடிவு பன்னிட்டா, அதுக்கு ஏத்த மாதிரி, என்னென்ன சாப்பிடனும் அப்படிங்கிறதையும் பிளான் பன்னனும். உடம்பை குறைக்கவும் சரி, உடம்பை ஏத்தவும் சரி, சரியான உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்.
பசி வந்தால், பாத்துக்கலாம்னு விட்டிங்கனா, உங்க ஆரோக்கியம் தான் பாழாய் போகும். அதனால, வாரத்தோட கடைசி அல்லது முதலிலேயே, இந்த வாரம் முழுக்க என்னெல்லாம் சாப்பிடப் போரோம் என்கிறதை திட்டமிட்டுக்கோங்க. வடிவேலு ஸ்டைலில் சொன்னா, “எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பன்னித் தான் பன்னனும்…”
2. டயட்டுக்கு வீகெண்ட் லீவு விடுவது
பலர் இந்த தப்பை பன்னுவாங்க. வாரம் முழுக்க கஷ்டப்பட்டு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி, டயட் இருப்பாங்க. ஆனா, சனி-ஞாயிறு வந்ததும், இரெண்டு நாள் தானே, கொஞ்சம் நல்லா சப்பிட்டுப் போம்னு, சும்மா பூந்து விளையாடுவாங்க.
இதனால என்ன ஆகும்னா, நீங்க கஷ்டப்பட்டு ஒரு வாரம் ஃபுல்லா வயிற்றுக்கு பட்டினி போட்டு டயட் இருந்தது எல்லாம் வீனா போயிடும். ஒரு வாரம் சாப்பிடாத கொழுப்பு, மொத்தமும் இந்த இரெண்டே நாள் கறி விருந்துல் இருந்து கிடைச்சிடும்.
அதனால், ஆஃபீஸ், ஸ்கூல், காலெஜ்ல, வீக்கெண்ட் லீவு விடுரமாதிரி டயட்டுக்கும் லீவு விட்டுடாதிங்க.
3. சரியா தன்னீர் குடிக்காதது
நம்மில் பலர் தன்னீரை சரியா குடிப்பதே கிடையாது. தன்னீர் நமக்கு ரொம்ப அவசியமான ஒன்று. நம்ம உடம்பு 60 சதவீதம் தன்னீரால் ஆனது. இதிலிருந்து வியர்வை மற்றும் சிறுநீரால் வெளியாகுற தன்னீரை சமன்படுத்த கண்டிப்பா நாம தன்னீர் குடிச்சே ஆகனும்.
நாள் ஒன்றுக்கு சுமாரா 2 லிட்டர் தன்னீர் ஒரு நபர் குடிக்கனும். தன்னீர் சரியா குடிக்க முடியாதவங்க, சப்பிடதுக்கு அப்புறம், ஜிம் வர்க் அவுட் பன்னின அப்புறம் தன்னீர் குடிக்கலாம். வெளிய போகிறவங்க, கூடவே தன்னீர் பாட்டில் கொண்டு போக வேண்டியது ரொம்ப அவசியம்.
4. சாப்பாட்டை தள்ளிப் போடுவது
பெரும்பாலும், வேலைக்கு போகிறவங்க காலை உணவை சாப்பிடுவதே கிடையாது. இது ரொம்ப ரொம்ப ரொம்ப கவணிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால், உங்களுக்கே தெரியாம, உங்க உடல் செல்களுக்கு படிப் படியாக பாதிப்பு ஏற்படும்.
அதோட, அடுத்த வேளை நீங்க சாப்பிடும் போது, அதிகமா சாப்பிட நேரிடும். இது உங்க ஜீரன உறுப்புக்கு கேடாக மாறும். அதனால, சாப்பாட்டை தள்ளிப் போடவே போடாதிங்க. டயட் இருக்க கூட சாப்பாட்டை தள்ளிப் போடக் கூடாது. உங்களுக்கு கலோரிகளைக் குறைக்கனும்னா, அதுக் கேத்தமாதிரி கம்மியா சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சி செய்துக்கலாம்.
5. வேலை செய்யும் இடத்திலேயே உட்கார்ந்து சாப்பிடுவது
ஒரு ஆய்வின் படி, வேலை செய்யும் மேசை மேலேயே வைத்து உணவை எடுத்துக்குறவங்களுக்கு அதிக பட்ச கொலஸ்ட்ராலும், வைட்டமின் குறைபாடும் இருக்காம். காரணம், வேலை செய்யும் இடத்தில், அதிக கவணம் உணவு மேல செலுத்த முடியாது.
அதே சமயம், நீங்க எழுந்து நடந்து போய் சாப்பிடும் போது, அதுவே ஒரு உடற்பயிற்சியா ஆகிடும்.
6. உடற்பயிற்சி முடிஞ்சதும் போது அதிகமா சாப்பிடுவது
உடற்பயிற்சி செய்யுறவங்க பலர், உடற்பயிற்சி முடிந்ததும், நல்ல ஹெவியான உணவை எடுத்துக்கிறதை வழக்கமா வச்சு இருக்காங்க. இவ்வளவு நேரம் உழைத்த உடலுக்கு ஒரு ட்ரீட் கொடுப்பதா இந்த உணவை அவங்க கருதுறாங்க.
ஆனா, இப்படி சாப்பிடுவதால, உடற்பயிற்சி செய்த கலோரிகள் எல்லாம் திரும்ப இந்த உணவிலிருந்து கிடைச்சுடும்.
7. எல்லாத்திலும் உப்பு சேர்த்துக்குறது
சாப்பாட்டுக்கு சுவையை கொடுப்பது உப்பு. இதனால, பலருக்கு இந்த உப்பு ரொம்ப பிடிக்கும். எல்லா சாப்பாட்டிலுமே, அதிகமா உப்பு போட்டு சாப்பிடுவாங்க. இப்படி உப்பு போட்டு சாப்பிடுவது ஆரோக்கியம் இல்லைனு கேள்விப் பட்டு இருப்போம். அது ஏன் தெரியுமா?
ஒரு டேபிள் ஸ்பூன் உப்புல, 2,300 மில்லி கிராம் சோடியம் இருக்கு. அதிக பட்சம் நம்ம உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான சோடியம் 1500 மில்லி கிராம் தான். மீதி இருக்கிற சோடியம் வெளியேற அதிக அளவு தன்னீர் தேவை.
அதனால, நமக்கு தன்னீர் தாகம் ஏற்படும். இதுல என்ன கெட்டது இருக்கு… தன்னீர் குடிச்சா நல்லது தானேனு நினைக்காதீங்க… இப்படி, உப்பை வெளியேற்ற தன்னீர் செல்வாகும் போது, சிறுநீரகத்துக்கு வேலை அதிகமாகும்.
அது சிறுநீரகத்துக்கு நல்லது கிடையாது. அதனால, உப்பை முடிந்த வரை குறைவா பயன்படுத்துங்க. உப்பே பயன்படுத்தாம இருக்கிறது, முடியாத காரியம். உப்புக்கு பதிலாக, எலுமிச்சை சாறு சேர்த்துக்கலாம்.
8. தூங்குவதுக்கு முன் வைன் குடிப்பது
நிறைய பேர் தூங்குவதுக்கு முன் வைன் குடிப்பது வழக்கம். இது நம்ம உடலில் கலோரிகளை அதிமாக்கிடும். வைனால கொஞ்சம் நன்மை இருந்தாலும், தூங்கும் முன்னாடி வைன் குடிப்பது அவ்வளவு நல்லது இல்லை.
இதுக்கு பதிலா, சர்க்கரை கம்மியான டீ, காபி இது போன்றதைக் குடிக்கலாம். அதுவும் இல்லைனா, வைனோட அளவைக் கொஞ்சம் குறைச்சு குடிக்க பழகிக்கலாம்.
No comments:
Post a Comment