விபத்துகளைத் தடுக்கத் தான் சிக்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இன்றைய காலத்தில், இந்த சிக்னல்களால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. காரணம் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன உலகத்தில், நம்மை ”ஒரு நிமிடம்” நிற்க வைத்து விடுகிறது இந்த டிராஃபிக் சிக்னல்கள்.
நாளுக்கு நாள் வாழ்கையை சுவாரஸ்யமாக்கிக் கொண்டு வரும் இந்த அறிவியல் இந்த நிறுத்தும் டிராஃபிக் சிக்னல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்காதா என்று நம்மில் பலர் புலம்பித் தள்ளியிருப்போம்.
அவர்களுக்கான ஒரு புதிய கண்டுபிடிப்பு தான் இந்த டான்ஸிங் டிராஃபிக் சிக்னல். இந்த வகை டிராஃபிக் சிக்னல்களின் பக்கத்திலேயே ஒரு டான்ஸிங் ரூம் உள்ளது. இதில் நுழைந்து ஒருவர் டான்ஸ் செய்தால், அவரது உறுவ அசைவுக்கு ஏற்றபடி, டிராபிக் சிக்னலில் உள்ள பொம்மையும் அசையும். இதனால், நிற்கும் ஒரு நிமிடம் நாம் இசையுடன் நடனத்தை ரசித்து விடலாம்.
இந்த டிராஃபிக் சிக்னலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது இந்த வீடியோவின் மூலகமாகத் தெரிகிறது. இந்த புதிய டிராஃபிக் சிக்னலை மட்டும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தினால், நம்ம ஊரில் தெருவுக்கு தெரு இருக்கும் மைகேல் ஜாக்சனின் குத்தாட்டத்தை நடுரோட்டிலேயே எல்லோரும் கண்டு களிக்கலாம்.
No comments:
Post a Comment