ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தால் நாட்டு மக்களே சந்தோசமடைந்துள்ளனர்.
நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரசாங்கத்தின இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார்.
பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு
தனியார் நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்படும். எனவே தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
கற்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும்
தேயிலையின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா
விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மாநியம் வழங்கப்படும்
விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
மண்ணெண்ணெய் விலை மேலும் 6 ரூபாவாக குறைக்கப்படும்
நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும்.
பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைக்கப்படும்.
சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
400கிராம் பால்மா விலை 325 ரூபாவாகும்
சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு
மாசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு
மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு
பான் விலை 6 ரூபாவால் குறைப்பு
திருமணப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக குறைப்பு
விளையாட்டு நிகழ்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதான வரி 1000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
கையடக்கத் தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்யும் அட்டைகளுக்கு காணப்பட்ட 25 சதவீத முற்றாக நிராகரிப்பு
பாவனையில் இருந்த அரச வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்
மாபொல புலமைப்பரிசில் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
யுத்தத்தில் ஊனமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகையுடன் கூடிய 5 இலட்சம் கடன் கொடுப்பணவுகள்
கைத்தொழில் செய்பவர்களுக்கு ஜீன் மாதத்திலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்
அனைத்து வங்கிகளும் நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் தமது கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு செலுத்தப்படும் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவால் குறைப்பு
சிரேஷ்ட பிரஜைகளுக்கு பஸ் கட்டணம் 50 வீதத்தால் குறைப்பு
கடன் அட்டைகளுக்கான வரி நூற்றுக்கு 8 வீதத்தால் குறைப்பு
மத்திய வர்க்கத்தினர் 250 ரூபா கொண்டு வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கேஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு
வெளிநாட்டில் பிரஜா உரிமை பெறுபவர்களின் பணத்திலிருந்து நூற்றுக்கு
வாகனங்களுக்கான வரியை நூற்றுக்கு 15 வீதத்தால் குறைக்க தீர்மானம்
அதிகமான நிறுவனங்கள் மீதான வரியை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க தீர்மானம்
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வாகணங்களுக்கான உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கான வரி முற்றாக நீக்க தீர்மானம்
சீமெந்து விலையை 90 ரூபாவால் குறைக்க எதிர்பார்கின்றோம்
மதுவரி இரு மடங்கு அதிகரிக்கப்படும்
கெசினோ வியாபாரிகளுக்கு 1000 வீதம் வரி அதிகரிப்பு
No comments:
Post a Comment