Wednesday, 28 January 2015

இது என்ன இப்படி ஒரு பிறப்பு..?


இரு பாலின உறுப்புக்களுடன் பிறந்த நாய்க்குட்டிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை ஆண் மற்றும் பெண் இன உறுப்புகளுடன் பிறந்த நாய்க்குட்டியொன்றுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மேலதிக ஆண் உறுப்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இடகோ மாநிலத்திலுள்ள கன்யன் நகர விலங்குகளுக்கான நிலையத்தில் நாயொன்று 5 குட்டிகளில் ஒரு குட்டியாக சார்கோல் என்ற மேற்படி நாய்க்குட்டி பிறந்தது.
அந்த நாய்க்குட்டி சிறுநீர் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதை கவனித்து அதனை பரிசோதனைக்குட்படுத்திய விலங்குகளுக்கான நிலையத்தின் பணியாளர்கள் இது இருபாலின பிறப்புறுப்புக்களையும் கொண்டிருப்பதை கண்டு திகைப்படைந்தனர்.
தற்போது அறுவை சிகிச்சை மூலம் மேலதிக பிறப்பு உறுப்பு அகற்றப்பட்ட நாய்க்குட்டியை குடும்பமொன்று வளர்க்க முன்வந்துள்ளது.

No comments:

Post a Comment