Tuesday, 27 January 2015

பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரங்களை அரசு வெளியிடவில்லை…!!


கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில், தமிழீழ விதலைப் புலிகலின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டதே தவிற அவர் இற்ந்ததற்கான, சட்டப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் காட்டப்படவில்லை என்று இலங்கையின் அரசு வழக்கறிஞர், கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இப்போரில், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக அறிவித்தது. ஊடகங்கள் செய்திகளும் படங்களும் வெளியாயின.
ஆனால், இது குறித்த அரசு ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இலங்கை அரசுக்குபிரபாகரன் இறப்பில் குழப்பல் இருப்பதால் தான் அதிகாரப்பூர்வ ஆதரங்களை வெளியிடவில்லை என்று இலங்கையின் மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இலங்கையின் வாணொலி ஒன்றின் பேட்டியில் வழக்கறிஞர் கே.வி.தவராசா இதைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வாணொலிப் பேட்டியில் மேலும் கூறியதாவது:
”இது தொடர்பாக லங்காசிறி என்ற வானொலிக்கு தவராசா அளித்த பேட்டியில், விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் குழப்பம் இருக்கிறது.
அவர்கள் கூறியதற்கான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் தமிழர்கள் குழம்பவில்லை. பல அரசியல் தலைவர்கள்தான் குழம்பிப் போயுள்ளனர்.”

No comments:

Post a Comment