விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துவரும் வேளையில், இப்படத்தினைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கின்றார்.
எனினும் இப்படத்திற்கு ஹீரோயின் இன்னும் கிடைத்த பாடில்லை. முதலில் நயன்தாரா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் தீபிகா என அடுக்கிக் கொண்டே சென்றனர். ஆனால் இவர்கள் யாரும் இப்போதைக்கு தமிழ் படங்களுக்கு நோ சொல்லி விட்டனர்.
தற்போது, சமந்தா அல்லது எமி ஜாக்சன் நடிப்பார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதுவும் இதுவரை உறுதியில்லாத தகவல்தான். சமந்தா ஏற்கனவே கத்தி படத்தில் நடித்திருந்தார். அதனால் எமி ஜாக்சன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் சம்பந்தபட்டவர்களோ இல்லை படக்குழுவினரோ அறிவித்தால்தான் உண்டு.
No comments:
Post a Comment