Saturday, 31 January 2015

Coffee குடிப்பது நல்லதா?? கெட்டதா??


காஃபி குடிப்பது நல்லதா.. இல்ல கெட்டதா அப்படினு ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.
காஃபி குடிப்பதால் கெட்ட விஷயங்கள் இருந்தாலும், பல நல்ல விஷயங்கள் இருக்கு. பொதுவா காஃபி விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். காஃபி குடிப்பதால் நிறைய நன்மைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
காஃபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும்.
உங்கள் நரம்புகள் மற்றும் ஒட்டு மொத்த நரம்பியல் அமைப்பையும் காஃபியில் இருக்கும் கஃப்பைனால் ஊக்குவிக்க முடியும்.இதனால், மிக தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், காஃபி குடிப்பது சற்று உதவும்.
காஃபியில் பொட்டாசியம், மாங்கனீஸ், பாண்டோதெனிக் அமிலம், நையாசின், மக்னீசியம் மற்றும் ரைபோஃப்ளேவின் அடங்கியுள்ளது.
சர்க்கரை நோயைத் தடுக்கவும் காஃபி உதவுகிறதாம்.
புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளை காஃபி குறைக்கும்.
காஃபி குடிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.
கல்லீரலைப் பாதுகாக்கவும் காஃபி பயன்படுகிறது.
எனினும் காஃபி குடிப்பது அளவாகவே இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான்.

No comments:

Post a Comment