எவ்வளவுதான் விலை அதிகமான கார்கள் இருந்தாலும் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பது ஒரு தனி மரியாதைதான்.
காரணம் என்னவென்று தெரியுமா?? பொதுவாக நாம் வாங்க வேண்டிய காரை நாம்தான் தேர்ந்தெடுப்போம். இதுவும் அப்படித்தான் என்றாலும், நீங்கள் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க விருப்பம் தெரிவித்தால், அந்த நிறுவனம் உங்களின் பின்புலம் மற்றும் உங்களின் ஸ்டேட்டஸ் சமூகத்தில் எப்படி என்பது குறித்து ஆராய்ந்து அதன் பிறகு அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்தால்தான் இக்காரை நீங்கள் வாங்க முடியும்.
1906 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி சார்லஸ் ஸ்டீவ்ர்ட் ரோல்ஸ் மற்றும் ஃபெட்ரிக் ஹென்றி ராய்ஸ் நண்பர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ரோஸ்ல் ராய்ஸ். அந்த காலத்திலேயே இதன் வடிவமைப்பு செயல் திறன் ஆகியவற்றால் இந்த கார் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியாவுக்கும் இந்த காருக்கும் பெரிய பந்தமே இருக்கின்றது. இந்தியவை ஆண்ட மஹாராஜாக்கள் பலரும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களைதான் வைத்திருந்தார்கள். அதுவும் ஒரே சமயத்தில் நான்கைந்து கார்களை ஆர்டர் செய்து வாங்கியவர்களும் உண்டு. அதே சமயம் இந்த நிறுவனத்தின் அந்தஸ்த்தை ஆட்டிப் பார்த்த மன்னர்களும் நம் இந்தியாவில்தான் இருக்கின்றனர்.
இந்தியாவை ஆண்டவர்களில் ஜெய்சிங் மஹாராஜாவும் ஒருவர். இவர் ஒருமுறை லண்டன் சென்றிருந்தார். அங்கு அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோருமிற்கு சாதாரணமாக சென்றுள்ளார். அவரை யாரென்று தெரியாத பணியாளர்கள் அவரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர். பின்னர் தனது பணியாளகளிடம் தான் வருவதாகக் கூறச்சொல்லி தனக்கே உரிய ராஜ உடையில் சென்றார். சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றனர் நிறுவனத்தினர். அவர் ஒரே நேரத்தில் 6 கார்களை ஆர்டர் செய்தார் ஜெய்சிங் மஹாராஜா.
இந்தியா வந்த அவர் அந்த 6 காரையும் குப்பை வண்டிகளாக மாற்ற உத்தரவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கௌரவத்திற்காக இக்காரை வாங்கிய அனைவரும் குப்பை வண்டியாக பயன்படுத்தப்படும் காரை தாங்கள் பயன்படுத்துவதை தங்கள் கௌரவத்திற்கே இழுக்காக கருதினர். புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க தயங்கினர். இதனால், அந்நிறுவனம் பாதிப்புக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து மன்னரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்புகோரியதுடன், அந்த ஆறு கார்களுக்குப் பதிலாக புதிய கார்களை பரிசாக அளித்தது.
ராஜாக்கள் மட்டுமே பயன்படுத்திய கார் என்பதாலோ என்னமோ அந்த காருக்கு உரிய மவுசு இன்றளவும் குறையவில்லை. இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத் போன்ற இடங்களில் இதன் பிரம்மாண்ட ஷோரும்கள் இருக்கின்றன.
இந்தியாவில் திரையுலகினர் அதிகமாக பயன்படுத்தும் காராகும் இது. அமிதாப் பச்சன், அமீர்கான், சஞ்சய்தத், சிரஞ்சீவி போன்ற பிரபல திரையுலகங்கள் இக்காருக்கு சொந்தக் காரர்கள் என்ற பெருமையை அடைகின்றனர்.
இயக்குனர் ஷங்கர் தான் தமிழ்நாட்டில் இக்காரை முதன் முதலில் வாங்கியவர். இவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் இந்த காரை வாங்கியுள்ளார். எனினும், கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் இதை வாங்க முயன்ற போது அவரின் பின்புலம் அவர்கள் நிறுவனம் எதிர்பாக்கும் அளவு இல்லை என்று மறுக்கப்பட்டது.
இவர்கள் தவிர தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி போன்றவர்களும் இக்காருக்கு உரிமையாளர்கள் என்ற பெருமையை கொண்டுள்ளனர்.
இதன் புதிய தயாரிப்பாக வெளிவந்துள்ள மாடல் ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த்.
No comments:
Post a Comment