அனேகன் படத்தினைப் பற்றி தவறான செய்திகளை பரப்பவேண்டாம் என ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் அஜித்தின் ’என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், அனேகன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காது என படத்தினை பிப்., 20க்கு தள்ளி வைக்க படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால், இதனை ‘அனேகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS எண்டெர்டெயின்மெண்ட் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் எனவும், படத்தினை பற்றி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment