தாய்வானில் செக்ஸ் தீம் பூங்கா ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. பெரிய ஆணுறுப்பு தோற்றத்திலான சிற்பம் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திறந்த வெளி பூங்காவில் மனிதர்கள், விலங்குகளின் பாலியல் செயற்பாடுகளை சித்தரிக்கும் சிற்பங்களும் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளை இந்த பூங்காஈர்க்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
தென் கொரியாவிலுள்ள இத்தகைய செக்ஸ் பூங்காவொன்றை அடிப்படையாகக் கொண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்படுகிறது. புதிதாக திருமணமான ஜோடிகள் தமது திருமண புகைப்படங்களை பிடித்துக்கொள்வதற்காக அழகிய காட்சிகள் கொண்ட பகுதியொன்றும் இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ளது.
உள்ளூர் சுற்றுலாத்துறை அலுவலகத்தின் பிரதி பணிப்பாளரான ஷிஹ் சாவோ ஹுய் எனும் பெண்மணி இத்திட்டம் குறித்து கூறுகையில், "தாய்வான் மீது மக்கள் காதல் கொள்ள வேண்டும். அவர்கள் தாய்வானில் இருக்கும்போதும் காதலில் விழ வேண்டும்" என நாம் விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 200,000 பேர் இப்பூங்காவை பார்வையிட வந்துள்ளதாகவும் இந்த பூங்காவுக்கு அருகிலேயே உல்லாச ஹோட்டலொன்றையும் நிர்மாணிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment