தமிழில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரைப் போல தெலுங்கில் பிரமாண்டமாக படங்களை எடுத்து மிரட்டக் கூடியவர் இயக்குநர் ’ராஜமௌலி’. இவர் சரித்திரக் கதைகளைப் படமாக்குவதில் வல்லமை மிக்கவர். இவர் எடுத்த சரித்திரப் படமான ’மஹதீரா’படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் சரித்திரப் படம் பாகுபலி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கப் படுகிறது. ‘பிரபாஸ்’, ’அனுஷ்கா’, ’ராணா’ ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இதில் பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவியும், தளபதி கேரக்டரில் சத்யராஜியும் நடிக்கின்றனர்.
மேலும் இன்னொரு ஹீரோயினான தமன்னாவும் நடிக்கிறார். ராஜமௌலி இரண்டு வருடத்திற்கும் மேலாக எடுத்து வரும் இந்தப் படத்தை தான் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் 12 நிமிட காட்சியை யாரோ இணையத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.
இதை அறிந்த ராஜமௌலி உடனே அவரது டெக்னிக்கல் டீமை வைத்து அந்த வீடியோவை இணையத்திலிருந்து அழித்திருக்கிறார், மேலும் அந்த வீடியோ எங்கேயாவது பதிவிறக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருக்கிறதா என்றும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் இந்த செயலை செய்தவரை கண்டுபிடிக்குமாறு போலீசில் புகார் அளித்தார் பாகுபலி தயாரிப்பாளர். போலீசும் உடனே இந்த வழக்கை கையில் எடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கி அவரை கண்டுபிடித்துள்ளது.
அது யாருமில்லை பிரபல கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர், பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளிலும் இவர் இருந்துள்ளதால்தான் இந்த காட்சிகள் அவர் கைக்கு சென்றுள்ளது, தற்போது அந்த வேலையில் அவர் இல்லையென்பதால் பாகுபலி படத்தின் காட்சிகளை இணையத்தில் ஏற்றியுள்ளார். இவரை போலீசார் கைது செய்துவிட்டனர்.

No comments:
Post a Comment