ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எப்படியும் இந்தப் படம் ஓடிவிடும் தமிழ் சினிமாவில் நாம் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடலாம் என்று.
அப்படி நினைத்துதான் கோடி கோடியாக பணத்தை சினிமாவில் கொட்டுக்கின்றனர் தயாரிப்பாளர்கள். ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் அந்த படம் தடை ஏற்பட்டு அவர்கள் கனவெல்லாம் வீணாக போவதுடன் போட்ட பணத்தை இழுந்து சொந்த ஊருக்கே செல்லும் நிலைமையும் ஏற்படுகிறது. அப்படிதான் தமிழ் சினிமாவில் இதுவரை 464 படங்கள் ரிலீஸாகமல் முடங்கி கிடக்கின்றன.
தமிழ் சினிமாவில் சென்சாராகி சான்று பெறும் எல்லாப் படங்களும் வெளியாவதில்லை. வெளியான படங்களைவிட பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை, அப்படி வெளியாகாமல் உள்ள படங்களின் எண்ணிக்கை மட்டும் 464. 2014ஆம் ஆண்டு மட்டும் தணிக்கை சான்றிதழ் பெற்று ரிலீசாகாமல் போன படங்கள் 144 ஆகும்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்சாராகி இன்னும் வராமல் உள்ள படங்கள் 320. ஆக 464 படங்கள் பெட்டியில் தூங்கிக் கொண்டுள்ளன. இந்தப் படங்கள் வெளியாகாமல் கிடப்பதற்கு முக்கிய காரணம், நிதிச் சிக்கல்கள்தான். காப்பி, கதைப் பிரச்சினை, வழக்குகள் போன்றவை இன்னும் சில காரணங்கள் தான்.

No comments:
Post a Comment