லிங்கா படத்தின் கதை திருட்டு வழக்கில் ரஜினி, கே.எஸ் ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியேரை நேரில் ஆஜராகும்படி மதுரை சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரவிரத்னம் என்பவர் ‘லிங்கா’ படத்தின் கதையானது தான் இயக்கிவரும் ‘முல்லைவனம் 999’ என்ற படத்தின் கதைதான் என்று இழப்பீடு கேட்டு மதுரை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
No comments:
Post a Comment